Loading Events

« All Events

  • This event has passed.

Guided Tour to Discover our Tamil Language in Singapore @ IHC

April 8, 2023 @ 3:00 pm - 4:30 pm

Guided Tour to Tamil Language in Singapore

சிங்கப்பூரில் நமது இந்திய மரபையும் தமிழ்மொழியையும் பற்றி மேலும் அறிய​ இந்​திய மரபுடைமை நிலையத்​​தின் தமிழ் வழிகாட்டி சுற்றுலா மற்றும் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.

 

இந்​திய மரபுடைமை நிலையத்​​தின் காட்சிகூடங்களை ஒட்டி தமிழில் வழிகாட்டி சுற்றுலா நடத்தப்படும். இச்சுற்றுலா மூலம் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரின் செழிப்பான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றியும், சிங்கையில் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பங்கையும் பற்றித் தெரிந்து​ கொள்ளலாம். இருவழி உரையாடல் கொண்ட இச்சுற்றுலா, இளையர்களால் வழிநடத்தப்படும். சிங்கையில் தமிழ் மொழி வாழும் மொழியாக தொடர்ந்து திகழ வருகையாளர்கள் அவர்களின் கருத்துகளையும் புதிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இவை வளர்தமிழ் இயக்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

 

தேசிய மரபுடைமைக் கழக நிர்வாகத்தின்கீழ், இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்திய மரபுடைமை நிலையம், தென்கிழக்காசிய வட்டாரத்தில் இந்திய, தெற்காசிய சமூகங்களின் வரலாற்றை ஆய்ந்தறிகிறது. நிலையத்தின் நான்கு மாடி கட்டடம், இந்தியப் பாரம்பரியத்தையும் நவீன கட்டடக்கலை அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த, நீடித்து நிலைக்கத்தக்க கட்டடமாகத் திகழ்கிறது. கட்டடத்தின் வெளித்தோற்றம் “பவோலி” (இந்தியப் படிக்கிணறு) போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியக் கலாசாரத்தைப் போற்றிக் கொண்டாடுவதற்கும் பேணிக் காப்பதற்கும் நகரமய அரங்கை உருவாக்கித்தர நிலையம் முற்படுகிறது. இங்கு ஐந்து நிரந்தரக் காட்சிக்கூடங்களும், சிறிய அளவிலான அரும்பொருளக வசதிகளும், அரும்பொருளகக் கடையும், நிகழ்ச்சி மற்றும் நடவடிக்கை இடங்களும் உள்ளன.

——————————-

Join us to discover our heritage and the Tamil Language in Singapore at the Indian Heritage Centre through a guided tour and a facilitated conversation in Tamil!

 

Join a free Tamil guided tour of the Indian Heritage Centre’s galleries led by our docents. Discover the rich history, heritage, and culture of the Indian and South Asian communities in Singapore and Southeast Asia and how Tamil Language has grown and played a key role in Singapore. This interactive tour will include conversations led by youth facilitators to share thoughts, comments on the learnings from history (seen in the galleries) and big ideas on how Tamil language can continue to be a living language in Singapore and will later be shared with TLC.

 

The Indian Heritage Centre (IHC), under the management of the National Heritage Board and with support from the Indian community, traces the history of the Indian and South Asian communities in the Southeast Asian region.

 

The four-storey IHC building is an iconic, unique and sustainable building that blends both traditional Indian as well as modern architectural elements. The architectural design for the facade of IHC is inspired by the “baoli” (or Indian stepwell), and seeks to create aurban forum for the celebration and appreciation of Indian culture. It houses five permanent galleries, small scale museum facilities, a museum shop as well as programming and activity spaces.

Venue

Indian Heritage Centre
5 Campbell Lane209924Singapore+ Google Map
Next Article:

0 %